CTC Ainthinai Tree plantation with TN Forest Department @ Ennore - Write up by Mano Bharathi




Tuesday, February 23, 2016
Excellent write up by Mano Bharathi.
Chennai Trekking Club - ன் ஐந்திணை.
நீண்ட நாட்களாக இருந்த ஒரு யோசனை சில நாட்களாக நிறைவேறி வருகிறது.
ஒரு Non Profit Organisation-ல் கலந்துகொண்டு social service செய்யவேண்டும் என்பது என் எண்ணமாக இருந்தது.
வார நாட்களில் செல்லும் வேலை இல்லாது, வார இறுதி நாட்களில் செய்துகொண்டிருக்கும் 'எழுத்துப்பணி'கள் இல்லாது பல்வேறு மனிதர்களுடன் பழகுவதற்கும் அவர்களுடன் சேர்ந்து நான் வசிக்கும் சென்னைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற யோசனையில் இருக்கும்போது கிடைத்தது தான் Chennai Trekking Club.
CTC-ன் நிலைத்தன்மை (Consistency) என்னை மிகவும் கவர்ந்து இழுத்தது என சொல்லலாம்.
CTC-ன் ஒரு பகுதியான ஐந்திணை மூலம் நடத்தப்பட்ட செடி நடும் நிகழ்விற்கு இன்று காலை சென்றிருந்தேன்.

காலை 6 மணிக்கு கிண்டி கத்திப்பாரா-விலிருந்து எண்ணூருக்கு வேனில் அழைத்துச் செல்லப்பட்டோம்.
8 மணிக்கு செடி நடும் வேலைகள் ஆரம்பம் ஆயின.
இடம் : எண்ணூர் தெர்மல் பிளான்ட் அருகில் உள்ள தமிழக வனத்துறையின் இடம்.
நாங்கள் சென்றபோதே வனத்துறையைச் சார்ந்த சில அதிகாரிகள் எங்களை வரவேற்றனர்.
குழிகள் தோண்டப்பட்டிருந்தன.
எரு- செம்மண் கலவை செய்து வைக்கப்பட்டிருந்தது.
புங்கை, வாதம், வேப்பம் , பூவரசு முதலிய செடிகள் இருந்தன.
எல்லா குழிகளிலும் இரண்டு பாண்டு அளவிற்கு செம்மண்-எரு கலவை கொட்டப்பட்டது, பின்னர் செடி நடப்பட்டு, சுற்றிலும் மண் போடப்பட்டு, அதன் மேலே மீண்டும் ஒரு பாண்டு அளவிற்கு செம்மண் - எரு போடப்பட்டது.
9.30 மணியளவில் காலை உணவை உண்டு பின்னர் மீண்டும் வேலையைத் தொடர்ந்தோம்.
12 மணி வரை வேலையில் ஈடுபட்டோம்.
சரியாக 173 மரக்கன்றுகள் நடப்பட்டது. தமிழக வனத்துறை அதிகாரிகள் நல்ல ஒத்துழைப்பைக் கொடுத்தனர்.

CTC - ன் ஒரு அங்கமாக செயல்படும் ஐந்திணை 'செடி நடுதல் மற்றும் அதனை வளரச் செய்து பராமரித்தல்' என்பதை முக்கிய கோட்பாடாக கொண்டு செயல்படுவதாக நண்பர் கூறினார்.
சில உணர்வுகளை சொல்வதை விட அனுபவித்தல் அழகு.
நேரம் இருக்கும் நண்பர்கள் இனி வரும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
- மனோபாரதி
13/02/2016

0 comments:

 

Copyright © 2015 • The Chennai Trekking Club