CTC Ainthinai's Tree Plantation cum Heritage Trip at Gangai Konda Cholapuram on Feb 14,15 by Senthil




Thursday, March 19, 2015

மரம் நட்டோம் ! வரம் பெற்றோம்!

விண்ணை வென்ற வித்தகன் - பயண கட்டுரை 
வணக்கம். கடந்த வாரம்(14,15-Feb-2015) CTC- ஐந்திணை குழுமத்தின் மரம் நடும் நிகழ்வின் பயண கட்டுரை.
CTC தனது  மரம்  நடும் விழாவை சரித்திர புகழ் பெற்ற  கங்கை கொண்ட சோழபுரத்தில்  நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

சனிக்கிழமை காலை 6 மணிக்கு கங்கை கொண்ட சோழபுரத்தை அடைந்தோம். திரு. கோமகன் அவர்கள் எங்களுக்கு அன்பான வரவேற்பு அளித்தார். அவர் இல்லத்தில் காலை சிற்றுண்டி அன்புடன் பரிமாறபட்டது .அவரது  வீட்டின் முகப்பிலிருந்து எந்த ஜன்னலை திறந்தாலும் கோவில் கோபுரம் நன்றாக தெரியும். அந்த அளவிருக்கு அவருக்கு அந்த கோவிலின் மீது காதல். பிறகு நங்கள் மரம் நாடும் வேலைய ஆரம்பித்தோம் மொத்தம் 87 மரக்கன்றுகளும் 33 செடிகளுக்கு வேலியும் கட்டினோம். பிறகு ஒரு ஆற்றங்கரை (?)  குளியல். அதன் பின் திரு கோமகன் இல்லத்தில் மதிய உணவு உண்டோம். மாலை 4.30 மணி அளவில் அவர் எங்களை திருக்கோவிலுக்கு அழைத்து சென்றார்.
கோவிலை பற்றி:

உள்ளே நுழையும் போதே இரு துவார பாலகர்கள் வரவேற்கின்றார்கள். அடுத்து பெரிய நந்தி.  இது ஒரு சுதை நந்தியாகும். இது ஒரு மண்டபம் மேல் சிவன் சந்நிதிக்கு 200 மீட்டர் தொலைவில் உள்ளார்.  தினமும் சூரிய ஒளி  நந்தி மீது பட்டு அது சிவன் மீது ஒளியை பாய்ச்சுவது விந்தை. எனவே விளக்குகளை அணைத்தாலும் சிவனை சூரிய ஒளியில் தரிசிக்க முடியும். அதை கண்ணார கண்டு இன்புற்றோம்.  கருவறையில் தென்னிந்தியாவிலேயே பெரிய லிங்கம். தஞ்சை பெரிய கோயிலை விட பெரிய சிவன். கம்பீரமாக காட்சி தருகிறார்.  8 ஆதார தூண்கள் கோவிலை தான்குகின்றன.  கோவில் சுவர்கள் சந்திரகாந்தா எனும் கல்லை கொண்டு கட்டப்பட்டுள்ளது. இது கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெப்பமாகும் உணர வைக்கும். அவர் எங்களுக்கு ஒவ்வொரு இடத்திலும் உள்ள நுட்பமான விஷயங்களை கூறினார். இந்த கோவிலில் நவக்ரங்கள் இல்லை. சூரியன் மட்டும் 7 குதிரை மேல் அமர்ந்து அருள் பாலிக்கிறார். 
முக்கியமான ஒன்று :

பொதுவாக சாதரணமாக யாருக்கும் அனுமதி கிடைக்காத கோவில் மேல் 2 அடுக்கு மண்டபதிருக்கும் அதற்கும் மேல் உள்ள கோபுர உச்சியின் கீழ் பாகத்திற்கும் அழைத்து சென்று காண்பித்து எங்களை மெய் மறக்க செய்தார். அது ஒரு தெய்வீக அனுபவம். அதை சொல்ல வார்த்தை இல்லை. அந்த கோவிலின் ஒவ்வொரு கணக்கும்  கட்டிட கலையின் உன்னத சான்று. 
ராஜேந்திரனை பற்றி :

இவனின் இயற்பெயர்  மதுராந்தகன் . மிகவும் அழகு வாய்ந்தவன். அதனால் காமவேள் என்றொரு மற்றொரு பெயரும் உண்டு.
கி பி 1012 இல் அரியணை ஏறினான். அன்று முதல் ராசேந்திரன் என அழைக்கப்பட்டான். "திருமன்ன வரை இருநில மடந்தையும் போர்ச்சயப் பாவையும் சீர்தனிச் செல்வியும் தன் பெருந் தேவியான இன்புற " என தொடங்கி தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும் மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரி வன்மரான உடையார் ஸ்ரீராசேந்திர சோழதேவர்க்கு யாண்டு என முடியம் மெய்கீர்த்தி வரிகள் இவன் புகழை பாடுகிறது. இவன்  தன்  ஆட்சியில் இடைதுறை, வனவாசி, கொள்ளி  பாக்கை, மண்ணை கடகம் ஆகிய நாடுகளை வென்றான்.  ஈழம் முதல் கடாரம் வரை வென்றான். அதனால் "கங்கை கொண்ட சோழன் " என சிறப்பு பெயர் பெற்றான். தனது தந்தையை போன்று இவனும் சிறந்த சிவபக்தன். எனவே தஞ்சை பெரிய கோயிலை போன்று இவனும் ஒரு கோவிலை கட்டினான். அந்த ஊரே  "கங்கை  கொண்ட சோழபுரம்" என அழைக்கப்படுகிறது.இதன் அருகிலேயே சோழ கனகம் எனப்படும்  பெரிய ஏரியை உருவாக்கினான். இவன் பின்னே வந்தவர்கள் இதையே தலை நகராக கொண்டனர்.
மறுநாள் மீண்டும் கோவிலை தரிசித்து மாளிகைமேடு எனும் கோட்டையை பார்த்துவிட்டு வீர நாராயண பெருமாள் எனும் விஷ்ணு ஸ்தலத்தை தரிசித்து காட்டுமன்னார்கோயில் வழியாக மேலகடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் எனும்  மிக நுட்பமான சிற்பங்களைக் கொண்ட தொன்மையான தேவாரப் பாடல் பெற்ற திருத்தலத்தையும்  மற்றும் கீழ்  கடம்பூர்  திருத்தலத்தையும் திரு கடம்பூர் விஜய் என்பவர் துணையோடு தரிசித்தோம். பிறகுசென்னைக்கு குடிநீர் தரும் (?) வீராணம் எனும் ஏரியையும் பார்த்து பாண்டிச்சேரி வழிய சென்னை வந்தடைந்தோம் 

சிறப்பு  நன்றிகள் : சிவா, திரு கோமகன்,திரு கடம்பூர் விஜய், இளஞ்செழியன்  மற்றும் சசிதரன்.

குழு:
தலைவர் சிவா. இளஞ்செழியன், மணிகண்டன், சசிதரன், சாந்தாலக்ஷ்மி, உஹாப்ரியா, கதிர், சுகன்யா, ஹேமப்ரியா  மற்றும் அவர்கள் பெற்றோர்கள், மலர்விழி,மணிவண்ணன்  மானசா, சசிகலா, ஹேமசந்தர் , ரமேஷ், நித்யா, ஷாகுல்,ஹரிஷா,மற்றும் நான் செந்தில்.

0 comments:

 

Copyright © 2015 • The Chennai Trekking Club