Pages

Friday, April 8, 2016

Post Event Kavithai - Weekday Night Camp / Morning Trek in Chennai Outskirts March 31st- Apr 1st

வாரநாட்களின் இரவு கூடாரம் / காலை மலை ஏற்றத்தின் எண்ண ஓட்டத்தின் எழுத்தோட்டம் by மாதேவன் மற்றும் வானதி

நிலவில்லா வானிடம் பேசினேன்
நட்சத்திரம் எண்ணிப் பழகினேன்
அளவில்லா ஆனந்தம் கொண்டேன்
அவளில்லா இரவினை ரசித்தேன்! 

கரையாத மணித்துளிகள்
மறையாத உண்மைகள்
அசையாத மரங்கள்
இசையோடு நான்! 

நலிந்தன பழங்கதைகள்
ஒளிந்தன பல வலிகள்
இசைவிசையில் வீழ்ந்தேன்
திசையெங்கும் நான்! 

வெவ்வேறு கருமைகளாலான
இருள் ஓவியமா இரவுக் காடு
வெளியேரும் வெறுமைகளென
சொல்லித் தருவதோ அதன் பாடு. 

எவ்வாறு கண்மணியிலடக்க
சுருள் காகிதமாய் நீளும் அழகை
மைத் துளி போதுமானாலும்
துளிபோதும் பிரிய மனமில்லை! 

கனவென்னக் கனவென்று 
உணர்தேன் - நிஜம் போல எதுவுண்டு 
வியந்தேன் - நகத்தளவு புன்னகையும் 
நன்மை நோக்கி நகர்த்தும் என்று
அறிந்தேன் - பகிர்ந்தேன் அன்பெனும்
நருந்தேன். 

மாதேவன் : https://oosimilagaai.wordpress.com/




முகம் காணாமல், முகவரி அறியாமல் 
நட்பெனும் கருவறைக்குள் சில நபர்கள்,
நண்பர்களாய் மறுவி போனார்கள்...
 
பழகிய சில மணித்துளிகளில்
சற்றே நடந்தோம் சிறு குழுவாய்
பாதை நீண்டது,பேச்சும் தொடர்ந்தது...
அடுத்தடுத்து அவரவர் அனுபவங்களில்

வழியெங்கும் பற்பல முற்கள்! 
தடுக்கி விழவைக்கும் கற்கள்!
ஓடிவர முயற்சிக்கும் கால்கள்!
அன்பாய் தழுவும் தென்றல்!
அதற்குள் கேட்கும் ராகங்கள்! 
அழகாய் மின்னும் நட்சத்திரங்கள்!

பாதையில் மேடு பள்ளமும் 
பக்கத்தில் ஓடும் ஆறும்
பதற வைக்கும் இருளும் 
இந்த இரவும் போனதே இன்பமாய்
அழகான அனுபவ கதைகளுடன்

அத்தனையும்அலசி பார்த்தால்,
இமைக்க மறந்ததே விழியும் 
என்னோடு ஆகாய மதியும்
மனதோடு மயான அமைதியும்
அறிவுறுத்தியது நத்தை நடைபோடும் நீ,
வேகம் பூட்டி ஓடு, பத்தில் பாதிகூட தாண்டவில்லை என்று!!!!
by வானதி.வை




"Problems are not stop signs, they are Guidelines" - Robert H.Schuller
Vanathi O Positive



No comments:

Post a Comment