Thanjavur
Team : Natives of Thanjavur
Cleanup Location : Samanthaan Kulam
( Post event write-up by Ganesh Anbu )
இனிதே நடந்து முடிந்தது சமந்தாங்குளம் தூய்மைபடுத்தும் பணி !!!!
பாண்டியர்கால சாமந்தங்குளம் தூய்மைபடுத்தும் பணியை செய்ய நாம் முடிவு செய்து, தஞ்சாவூர் மைந்தர்களின் ஆதரவை நாடி இங்கே பகிர்ந்தோம். அவசியம் வருகிறோம் என்று பலர் பக்கத்தில் நாங்கள் உருவாக்கிய நிகழ்வில் பலர் கண்டிப்பாக வருகிறோம் என்று சொல்லி இருந்தனர்.இந்த நிகழ்சிக்கு அனுமதி வழங்கி நிகழ்வை தொடங்கி வைக்க வணக்கத்திற்குரிய மாநகர தாய் திருமதி சாவித்திரி கோபால் அவர்கள் இசைந்தார்கள், நிகழ்சிக்கான அனைத்து முன்னேர்பாடுக்களிலும் எங்களுக்கு முழு உறுதுணையாக தஞ்சை சட்டமன்ற உறுப்பினரின் மகன் திரு வினோபாரத் எங்களுக்கு பல உதவிகள் வழங்கினார்.
ஆனால் நிகழ்சிக்கு முன் இரு தினங்களாக எனக்கும் லோகேஷுக்கும் ஒரே மன உளைச்சல் ஒரு 10 பேராவது வருவார்களா என்பது தான் ஏன் என்றால் பக்கத்தில் உருவாக்கிய நிகழ்வில் பலர் வருகிறேன் என்று சொன்னாலும் பிறகு ஒருவர் கூட இதைப்பற்றி விசாரிக்கவோ, உறுதியாக வருவதாகவோ சொல்லவில்லை.. குறைந்தது ஒரு 25 பேராவது வந்தால்தால் கால்வாசி குளமாவது சுத்தம் செய்ய இயலும். ஆனால் 10 பேர் வருவது கூட உறுதியாகவில்லை. இறுதியாக யார் வந்தாலும் வராவிட்டாலும் நிர்வாகிகள் நாம் ஒரு 5 பேர் இருக்கிறோம், ஆளே இல்லாவிடினும் இறங்கி வேலை செய்வது என்று உறுதியாக முடிவு செய்தோம். இருந்தாலும் நான், லோகேஷ்,சிவா,கணேசமூர்த்தி,சக் கரவர்த்தி,விக்கி,சுமதி, முத்துக்குமார்,விவேக், லோகேஷ் அண்ணன் மகன்,லோகேஷ் அப்பா என்று ஒரு 10 பேர் சென்றோம். 9 மணிக்கு பணிகளை தொடங்கினோம்.
சரியாக 9.15 மணிக்கு வணக்கத்திற்குரிய மாநகரதாய் திருமதி சாவித்திரி அவர்களும் அவரின் கணவர் திரு கோபால் அவர்களும் கலந்துகொண்டார்கள். உங்களால் முடிந்தவரை இந்த பணிகளை செய்யுங்கள் என்றும், இந்த குளத்தை முழுதும் சுத்தம் செய்யும் பணிகளை உங்களின் அறக்கட்டளை சார்பில் முழுதும் முடித்து தாருங்கள், நான் உங்களுக்கு அணைத்து வகையிலும் உறுதுணையாக இருப்பேன், எந்நேரமும் எந்த உதவி என்றாலும் என்னை அனுன்குங்கள் என்றும், இங்கே குழாய் வழியாக மாநகராட்சி குடிநீராயோ, அல்லது போர் போட்டு நீர் நிரப்பவோ கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் என்று உறுதிகொடுத்தார், பின்னர் காலை சிற்றுண்டி வாங்கிக்கொள்ள பணம் வழங்கினார் வேண்டாம் என்றோம் உங்கள் பணிக்காக என்னுடைய சிறு உதவி அவசியம் ஏற்றுகொள்ளுங்கள் என்றார். பிறகு என்னிடம் எந்த உதவி என்றாலும் அவசியம் என்னுடைய எண்ணுக்கு அழையுங்கள் என்னை தொடர்புகொள்ளுங்கள் என்றார், உண்மையில் மன உளைச்சலில் பணி தொடங்கிய எங்களுக்கு மேயர் வந்ததும், இந்த பணிக்கு உதவி செய்ய உறுதி செய்தது உண்மையில் பெரிய ஆறுதல்.
பிறகு சிறிது நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் மகன் திரு வினோபரத் வந்து நிகழ்வில் கலந்து கொண்டார், உண்மையில் இவரை நாங்கள் பெரிதும் கடமைப்பட்டு உள்ளோம். எப்பொழுது அழைத்தாலும் எங்களோடு வந்து சட்டமன்ற உறுபினரையோ, மேயரையோ பிற துறை முக்கிய பொறுப்பில் உள்ளவர்களையோ சந்திக்கும் வழியை எளிமையாகி தருவார், எந்த அனுமதி கிடைக்கவும் உதவி புரிவார், சகோ உங்களுக்கு எங்கள் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.
வெயிலையும் பொருட்படுத்தாமல், கடுமையான முள் காடுசெடி என்று எதனையும் பொருட்படுத்தாமல் முழு மூச்சாக உழைத்த சக்கரவர்த்தி,லோகேஷ் அண்ணன் மகன், சுமதி, முத்துக்குமார்,லோகேஷ் அப்பா ,கணேசமூர்த்தி, விகி, விவேக் இவர்கள் அனைவரின் பணிக்கும் எங்களில் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எந்த பணிகளையும் ஈடுபாடோடு செய்யும் லோகேஷ்க்கு என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்.
இது வெறும் ஆரம்பம் தான் ஒரு பணி முழுமை அடைவது ஒருவரின் கையில் இல்லை, ஊர் கூடி இழுத்தால் தான் தேர் நகரும். நாம் அனைவரும் ஒன்று கூடினால் தான் நாம் நம்முடைய நீர்நிலைகளை காப்பாற்ற முடியும். இனி அலுவல் பணியில் பிஸியாக இருக்கும் உறுபினர்களை தொந்தரவு செய்ய இயலாது. இந்த பணிகள் செய்யும் ஆட்களை வரவழைத்து ஊதியம் வழங்கி முழுதும் சுத்தம் படுத்த முடிவு செய்து உள்ளோம். கண்டிப்பாக முயல்வோம்
நன்றி
தஞ்சை மைந்தன் கணேஷ் அன்பு
--
0 comments:
Post a Comment