ஐந்திணை நாற்று நடவு முகாம் 14-ஜூன் 2015 – ஒரு பார்வை.
OrganicVille- கு புறப்பட்ட குறிப்பு
வலக்கம் போல நான் வைத்த அலாரம் 4.15 AM கு அடித்து என்னை எலுபியாது. நானும் எலுந்து ஐந்திணை முகாமிருக்கு செல்ல ஒரு வலியாக தயாராகி கிண்டி டொயோடா ஷோரூம் முன்பு 5.03 கு வந்து சேர்ந்தேன். அங்கு யாருமே இல்லை . சரி நமது கிண்டி ஒருங்கிணைபளர் சு ந்தர் கு ஒரு ப்போன போட்டேன். அவர் 10 நிமிடங்களில் வருவதாக கூறினார். அதுபோலவே வந்துவிட்டார். அதற்குள் சதீஷ் அவர்கள் அவரது மகனுடன் அவர் காரில் வந்துவிட்டார் . எங்கள் கிண்டி பகுதியில் இருந்து 14பேர் (6 பைக், 2 கார்) 5.40 புறப்பட்டோம். நான் சதீஷ் சார் உடன் காரில் கிளம்பினேன். செல்லும் வலியில் ஒரு 25 நிமிடம் சாலை போக்குயவரது நெரிசலில் செலவிடவேண்டியதாயிற்று.
நாங்களும் மற்ற பகுதிகளில் இருந்து வந்த நண்பர்களும் தாம்பரம் கேம்ப் சாலையில் சந்த்து ஒன்று சேர்ந்து பயணிக்க ஆயர்தம் ஆணோம். அடுத்த 10வது நிமிடம் நாங்கள் OrganicVille யை அடைந்தோம். அப்போலுது நேரம் சரியாக 6.40. நாங்கள் வந்த்தவுடன் சாந்தலக்ஷ்மி எங்களிடம் காலை உணவுக்காக ஒவ்வொருவரிடமும் ரூ 30 ஐ பெற்றுக்கொண்டார்.
ஒற்றை நாற்று நடவு முறைகளயும் அதன் விளக்கங்கலும் ( )
பிறகு ஒற்றை நாற்று நடவு முறைகளயும் அதன் விளக்கங்களையும் நன்றாக எல்லோருக்கும் புரியும் விதமாக கோபிநாத்அவர்கள் விளக்கமாக சொல்லி கொடுத்தார் (எனக்கு இதை பற்றி முதலிலேயே நன்றாக தெரிந்திருந்தது ). செயல் விளக்கம் முடிந்தயுடன் வந்திருந்தவர்கள் இரு குழு வாக பிரிந்து வயலின் டொடக்காதில் ஒரு குழு வும் பாதியில் இருந்து ஒரு குழு வும் நாற்றுகளை நட ஆயர்தம் ஆணோம். தாமதமாக வந்தவர்கள் இனொரு குழு வாக சேர்ந்து விடுபட்ட இடத்தில் நட முற்பட்டனர்.
பின்பு நான் என் ஒரிஜினல் சஷ்டியும்க்கு மாறிவிட்டேன் (தலப்பா கட்டு மற்றும் வேட்டி ).
நாற்று நடவு
காலை 7 மணி நாங்கல் வயலில் இறங்கி நாற்றை நட ஆரம்பிதோம்.கேசவன் (அந்த வயலில் முலுநேரமாக இந்த வேலையை செய்பவர் ) அண்ணனின் உதவியோடு வயலின் இருபுறமும் பக்கதிர்க்கு ஒருவராக பிடிதிருந்த சனல் கயிரில் இருந்த அடயாளங்களின் உதவியால் சீரான 22 செந்திமீட்டர் இடைவெளியில் நாற்றுகளை நாட்டுக்கொண்டிருந்தோம் 20 பேர் வரிசையாக நின்று நாற்று நாட்டு கொண்டிருந்தோம் .நான் (பாலாஜி ஜோதிமணி), சதீஷ் மற்றும் அவரது மகன், கணேஷ்,நிரஞ்சனி , ரகு , இன்னும் சிலர். மாசு , பிரசன்னா மற்றும் சில தோழர்கள் நாங்கள் நடுவதற்காக நாற்றுக்களை கொண்டு வந்து கொடுதனர். இதில் நாத்து வாங்கலியோ நாத்து என்று கூவி கூவி விற்பனை செய்தபடியே அங்கும் இங்கும் திரிந்துகொண்டு இருந்தனர். நாற்று நடவு கலைக்கட்டிக்கொண்டிருந்தது . அப்போலுதுதான் காமிராவுடன் பிரியாவின் என்ட்ரி.
(இது நாந்தனுங்கோ )
காமிரா கேர்ள் ப்ரியா
பிரியா எல்லா கோணங்களிலும் நாற்று நடுவதை மிகவும் அழலகாகவும், சிறப்பாகவும் படம் பிடித்துக்கொண்டிருந்தார். நாங்கல் அவரை எங்களை நன்றாக படம் எடுக்க சொல்லிகொண்டே இருந்தோம். அக்கா அக்கா நான் நல்லா தெரியுறேனா, என்னையும் நல்லா படம் எடுங்கன்னும், வரலாறு முக்கியம் அமைச்சரே என்றும் ஒரே தொல்லை பண்ணிட்டோம் . அப்பொலுது ப்ரியா“Hai don’t call me akka akka , Just call me priya OK”ன்னு சொல்ல அதையும் நாங்கள் ஏற்றுக்கொண்டோம். பிறகு அவர் எங்கள் கோரிக்கையை மறுக்காமல் எங்களுக்காக செய்தார். வயலில் இரங்கவும் மிகவும் பந்துகொண்டே இருந்தார் எங்கு கிலே விலுந்து விடுவோமோ என்று. ஷோ சேட்
நண்பர்களின் கொலைவெறி.
நான் முதலில் வயலின் நடுவில் நின்றுகொண்டுதான் நடவு செய்துகொண்டிருந்தேன். எனது உடைகளை பார்க்க அப்படியே கிராமத்து அழகான இளைங்கன் போலவே இருப்பதாக கூறி (சரி விடுங்க விடுங்க )என்னை புகைப்படம் எடுக்க வயல் வரப்பின் ஓரமாக நடவு செய்ய சொன்னார் பிரிய. கரும்பு திங்க கூலியா வேணும். நானும் அவ்வாரே செய்தேன். விதவிதமாக போஸ் குடுதேன். நிறைய கோணங்களிலும் படம்பிடிதார் பிரியா. எனையும் அழகாக படம் பிடித்த பிரியவை வாழ்த்த தோன்றிய ஒரு டயாலாக்
உன்னையெல்லாம் இன்னும் ஒரு 100 வருசத்துக்கு யாரும் ஒண்ணும் பண்ண முடியாது போமா ......
நீயெல்லாம் நல்லா வருவா மா ! நல்லா வருவா !
பிரியா என்னையே நிறைய படம் பிடிப்பதை பார்த்து வெறுப்பான நமது மற்ற நண்பர்கள் என்னை திட்ட ஆரம்பிதனர். ஒருவன் சொன்னான் டை பாலாஜி ஓட வேட்டிய உருவுடா னு. நீங்க இப்டிஎல்லாம் பண்ணுவீங்கன்னு தேரிஞ்சுதான் ஒரு ஷார்ட்ஸ் போட்டு இருந்தேன் என்று சொல்லி அவர்களை சமாளித்து விட்டேன் .
திரிகடுகம் தேனீரும், உளுந்து வடையும்:
நாற்று நடவு செய்துகொண்டு இருக்கும் போதே 2 பேர் கொண்ட குழுவொன்று வரிசையாக நடவு செய்யும் நண்பர்களுக்கு திரிகடுகத்தால் செய்யபட்ட தேனீர் கொடுத்தனர். என்ன ஒரு சுவையான தேனீர் , வெகு நாட்களுக்கு பின்னர் என் அருமை பாட்டிக்கு பிறகு இங்குதான் இந்த திரிகடுக தேநீரை சுவைக்க வாய்பு கிட்டியது .
திரிகடுகம் - சுக்கு , மிளகு , திப்பிலி இவ ை மூன்றும் சேர்ந்த கலவை ஆக்கும். இந்த திரிகடுகத்துடன்
பனைவெல்லம் சேர்த்து இந்த தேனீர் தயாரிக்கபட்டு இருந்தது.
இன்னொரு தோழர் அனைவருக்கும் உளுந்து வடை கொடுதுகொண்டே வந்தார். எங்கள் கரங்கள் சேறும் சகதியுமாக இருந்த காரணத்தால் அனைவருக்கும் வடையை வாயில் வைது ஊட்டி விட்டபடியே நகர்ந்தார் . என் அம்மா,அப்பா,பாட்டிக்கு பிறகு எனக்கு ஊட்டி விட்டது இவரே.
வினோத் வந்ததே லேட் இதுல வயலில் இறங்கி வேலை செய்யாமல் வடை தருகிறேன், நாற்று தருகிறேன் என்று ஒபேதிக்கொண்டே இருந்தார்.
சேறு விளையாட்டு:
நாங்கள் முக்கால் பாகம் எங்கள் நாடாவை முடிதிருந்த சமயத்தில் சில தோழர்கள் பிரசன்னா உடன் சேர்ந்து கொண்டு வயல் சகதியில் குதித்து விளையாட ஆரம்பிதனர் . கடைசியில் சேறுடன் குழு வாக புகைப்படமும் எடுதுகொண்டனர். எனக்கும் போகவேண்டும் என்றுதான் தோணியாது. இருப்பினும் நடவை பாதியில் விட்டு வார மனமில்லாமல் நடவை தொடர ஆரம்பித்தேன். நான் நடவை முடித்துவிட்டு பார்த்தால் ஒருவரும் சேற்றில் இல்லை. அனைவரும் கேணிக்கு குளிக்க சென்றுவிட்டனர். அப்போலுது என் மனதில் தோன்றிய சில வரிகள்.
டேய் நீங்கலாம் நல்லாவே இருக்க மாட்டீங்கட !!! நல்லாவே இருக்க மாட்டீங்க!!!
பின் நானும் கனேசும் சேற்றில் இறங்கி சிறிதுநேரம் புரண்டுவிட்டு குளிக்க சென்றோம்.
பானகத்தின் சுவை
நடவு செய்து முடித களைப்பில் இருந்த எங்களுக்கு சுவையான பானகம் தயார் நிலையில் இருந்தது . நாங்கள் அதை ஆளுக்கு ஒரு குவளை வீதம் சுவைத்தோம் .
பானகம் –
பின்குறிப்பு : ஒவ்வொருவருக்கும் ஒரு குவளை பானகம் என்று ICU வார்டு நர்ஸ் மாதிரி ஸ்ட்ரிட் அஹ பேசிட்டு கடைசியில் ஓட்டு மொத்தமாக 10 குவளை பானகம் குடித்த நமது சுந்தர் அவர்களுக்கு வயிற்று வலி வரவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
சுய அறிமுகம் :
பின்பு சென்று கேணியில் குதித்து உடம்பில் இருந்த சேற்றை நன்கு கழுவிக்கொண்டு வந்து அனைவரும் நிழலில் அமர்ந்தோம். சுய அறிமுகம் தொடர்ந்தது . Chennai Trekking Club கு முதன் முதலில் வந்த தோழர்கள் தங்களின் அனுபவங்களையும், CTC-ஐ பற்றி தெரிந்து கொண்டது எப்படி என்றும் கூறினார்.
மறுவயலில் நடவு:
சிறிதுநேரம் இளைப்பாறிய பின்னர் பாதிப்பேர் பிரம்படிக்கபட்டு நீற்பாய்ச்சி தயார் நிலையில் உள்ள மாறுவயலில் நாடாவை ஆரம்பிக்க ஆயர்தம் அனோம். என்னுடன் சஞ்சய் சார் அவரது மனை வி மற்றும் அவர்களது செல்லாக்குட்டி மூன்றே வயதகும் சிறிய மகள் அனைவரும் சேற்றில் இறங்கி நடவு செய்ய ஆரம்பிதனர். சஞ்சை சாரின் மகள் தொடர்ந்து பல கேள்விகளை அவளுக்குரிய மலழை மொழியில் கேட்டவண்ணமே இருந்தால். அனைத்து கேள்விகளுக்கும் சஞ்சய் மிகமும் அழகாக விளக்கம் அளிதபடியே நடாவில் ஈடுபட்டார்.
இந்த நடவின் போதுதான் வினோத் வயலில் இறங்கி நாற்று நட ஆரம்பிதார்.
காலை உணவு கம்மாங்கூழ்
நாங்கள் பாதி நடவை முடித்திருந்த சமயத்தில் காலை உணவிர்க்காக கம்மாங்கூழ் தயார் செய்திருந்தனர். நாங்கள் சென்று கூழ் குடிக்க ஆரம்பித்தோம். நான் 7 குவளைகாளை முடித்து 8 வது குவளை தொடங்கும்போது கணேஷ் என்னை தடுத்து, குளித்து விட்டு வந்து மறுபடியும் குடிக்கலாம் என்று சொல்லி என்னை மறுபடியும் அருகில் இருந்த கேணிக்கு அலைத்து சென்றார் .
கேணியில் ஆனந்த குளியல் :
கேணியை நெருங்க நெருங்க ஆர்வம் அதிகமானது . அங்கு ஏற்கனவே சில தோழர்கள் குளிதுக்கொண்டிருந்தனர். நான் மேலே இருந்து “தலைகீலாகதான் குதிக்கா போகிறேன் ” என்று கூறியவாறே தலைகீலாக குதிதேன்.
கேணியினுள் தயிரியமாக சில நீச்சல் தெரியாத நண்பர்களும் இருந்தனர் . 25 அடி விட்டம் கொண்ட சிறு கேணியில் ஒரு முனைல் இருந்து காலில் ஒரு முளு விசை கொடுத்தாலே அடுத்த முனைக்கு சென்றுவிடலாம். இதையேதான் ஆனந்தும்செய்துவிட்டு நானும் நீச்சல் அடித்தேன் என்று அனைவரிடமும் கூறிக்கொண்டிருந்தார் . நீச்சல் தெரியாத பெண் தோழிகளும் தயிரியமாக கேணியினுள் இறங்கி குளிதுக்கொண்டு இருந்தனர் . இடையில் கேணிக்குள் ஒரு தண்ணிப்பாம்பை பார்க்க நேர்ந்தது. அதை கொஞ்சம் கூட பொருட்படுதாமல் தொடர்ந்து குளிதுக்கொண்டு இருந்தோம். குளிக்கும்போது சில நண்பர்கள் காமிராவில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். பிறகு ஓரளவுக்கு நீச்சல் தெரிந்த நண்பர்களுக்கு நீரில் எப்படி நிற்பது என்றும் சொல்லிக்கொடுத்தோம். ஆனந்த் குளிக்கும் பொது தான் பாக்கெடில் இருந்து ஒரு கடலை மிட்டாய் பாக்கெட்டை எடுத்தார் . அதையும் சண்டைபோட்டு பிடுங்கி தின்றாய்ற்று. கடைசியாக சாந்த லட்சுமி மற்றும் காயத்திரி ஆகியோர் கிணற்றில் இறங்கி படியில் உட்கார்ந்து குளிதுவிட்டு மேலேறினார். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் நான் ,கணேஷ் மற்றும் சில நண்பர்களும் பாதுகாப்பாக கிணற்றினுள் இருந்தோம்.
இனிமையான உரையாடல்கள்:
நாங்கள் குளித்துமுடித்து வந்தபோலுது சில நண்பர்கள் நடவை தொடர்ந்துகொண்டிருந்தனர். மீதமுல்ல நண்பர்கள் வேப்ப மாரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். எனக்கு மறுபடியும் பசிஎடுக்கவே நான் மறுபடியும் 6 குவளை கம்மாங்கூழ் மிளகாய்யோடு குடிதேன். பின் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போலுதுதான் என் அலுவலக (TCS) நண்பர் அருணை சந்திக்கும் வாய்பு கிடைத்தது. மேலும் பல விடயங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.
மறு குளியல்.
நடவு முடிந்ததும் நண்பர்கள் குளிக்க கேணிக்கு சென்றனர் . ஆசை யாரை விட்டது , நானும், கணேஷ் அவர் களுடன் சேர்ந்து மறுபடியும் குளிக்க சென்றேன். ப்ரியா மற்றும் சஞ்சய் அவர்கள் எங்களை கேணியினுள் குதிக்க சொல்லி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அருமையான புகைப்படங்கள். கடைசிவரை பிரியா பயந்துகொண்டு கிணற்றினுள்ளும் இறங்கவில்லை.
மாசாணமுத்து என்கிற மாசு எங்களை கேணிக்குள் விடாமல் தாடுத்தவண்ணமே இருந்தார். நாங்கள் அவரை ஏமாற்றி ஏமாற்றி குதித்துக்கொண்டே இருந்தோம். ஒருவலியாக கடைசியில் எல்லோரையும் கேணியிலிருந்து வெளியேற்றி அனைவரையும் அலைதுசென்று ஆலமரத்தடி நிழலில் ஒன்றுதிரட்டினார் ஒரு சிரிய கலந்துரையாடலுக்காக.
நினிகழ்ச்சியின் இறுதி கலந்துரையாடல் :
ரத்த தானம் :
கல்ந்துரையாடலில் காயத்திரி ரத்த தானம் பற்றி பேசினார். எக்மோர் குழந்தைகள் மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்காக போரடிவரும் சின்னஞ்சிறு மலழைகளுக்காக ரத்தம் தொடர்ந்து தேவைபடுவதாகவும் அதற்க்கு உதவும் படியும் CTC புதிய நண்பர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் . பிரசன்னா ரத்த தானம் செய்வதற்கான தகவல்களை பதியும் இணைப்பை மின்னஞ்சலில் பகிர்ந்தார் . நீங்களும் உதவுமாறு மிகவும் தால்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் பதிவதற்க்கு இங்கே சொடுக்கவும்.
மூலிகை தேனீர் :
பிறகு GTS டிரஸ்டில் இருந்து வந்திருந்த தணிகாசலம் என்ற நண்பர் நாங்கள் காலையில் குடித்த திரிகடுக தேனீர் பற்றி விளக்கம் அளித்தார். திரிகடுக தேனீர் எப்படி தயாரிப்பது என்றும் உடம்பை குறைக்க, சர்க்கரை நோயை கட்டுபடுத்த என்னென்ன பொருட்கள் சேர்க்கவேண்டும் என்றும் விளக்கமாக கூறினார். 80 குவளை தேனீர் தயாரிக்க தேவையான திரிகடுக தேநீர் பொடி நிறைந்த பாக்கெட்டை ரூ 80 கு விநியோகம் செய்தார். அதாவது ஒரு குவளை தேனீரின் விலை வெறும் ஒரு ரூபாய் . நாங்கள் அனைவரும் திரிகடுக தேனீர் பொடியை விரும்பி வாங்கினோம். அவர் அலைப்பு என்னை இங்கே பதிகிறேன் உங்கள் நலனிற்காக. இந்த திரிகடுக தேனீரை நீங்களும் வாங்கி பயன்பெறுங்கள். ஆடரின் பேரில் உங்கள் வீட்டு விசேசங்களிலும் இவர்கள் இந்த திரிகடுக தேனீரை செய்து தருகின்றனர்.
GTS international Trust – 9710 771112, 8681868185.
Email: thanikachalam63@gmail.c om
இறுதியில் அனைவரும் குளு புகைப்படம் எடுதுக்கொண்டோம், எனக்கு தெரிந்து ப்ரியா இந்த ஒரேயொரு புகைபடதில்தான் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
பிறகு நான் சஞ்சய் சாருடன் அவரது காரில் CIT நகர் வரை சென்று இறங்கிக்கொண்டேன் . அங்கிருந்து 5E பேருந்தில் என் வீட்டிருக்கு(மேட்டுப்பாளையம், மேற்க்கு சைதாபேட்டை ) சென்றுவிட்டேன். இங்கு என் நண்பர்கள் மீன் குளம்பு வைதிருந்தனர் , அதை நன்றாக ஒரு பிடி பிடித்துவிட்டு தூங்கிவிட்டேன். மாலை எலுந்தவுடன் முதல் வேலையாக இந்த பதிவை எலுத துவங்கினேன். நண்பர்கள் பகிர்ந்தத புகைப்படங்களை என் பெற்றோர்களிடம் பகிர்ந்தேன். அவர்கள் மிகவும் பூரித்துபோனார்கள். நாற்று நட்ட சிறு குழந்தைகளையும் வாழ்த்தினார்கள்.
நான் ரசித்தவை :
ü என் ஊரை நியாபகபடுத்திய அந்த வயல்.
ü சேற்றில் இறங்கி நாற்று நாட்டது .
ü பிரியா எடுத்த புகைபடங்கள் மற்றும் என்னை புகைப்படம் எடுக்கும் போது சக நண்பர்கள் என்மீது கொலைவெறி ஆனதும்.
ü சஞ்சய் சாரின் குட்டி மகள் நாற்று நாட்டதும், அவளின் மலழை கேள்விகளும் அதற்கான சஞ்சை சாரின் விளக்கங்களும்.
ü நடவின் இடையில் அவசர அவசரமாக குடித்த திரிகடுக தேனீரும், உளுந்து வடையும், சுவைமிகுந்த பானகமும்.
ü காலை உணவான கம்பங்கூழும் , பச்சைமிளகாயும்.
ü நண்பர்களின் சேற்று விளையாடும் , பிரசன்னாவின் கால் உடைந்த்ததும். (என்ன சேக்காம விளையாண்டிங்கள, நல்லா வேணும்)
ü கேணியில் தலகீலாக குதித்ததும், 3 முறை குளித்ததும். (நானெல்லாம் எண்ணக்கி ஞாயிற்று கிளமையில் குளித்திருக்கிறேன்)
ü இறுதியில் திரிகடுகம் தேனீர் பொடி, மிளகு, மாம்பலம் வாங்கியது.
இந்த நாற்று நடும் முகாம் பற்றிய எனது கருத்துக்கள்.
Ø கிடைக்கும் விடுமுறையில் சினிமா, பார் , பப் , டூர் என சுற்றித்திரியும் வயதில் இது மாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதூம் , அதர்க்காண அணுகுமுறைகளும் இந்த காலத்து இளைங்கர்களுக்கு நமது சமூகத்தின் மேல் உள்ள மதிப்பையும், அக்கறையையும் நன்றாகவே பிரதிபலிக்கின்றது. இது ஒரு நல்ல துவக்கம்.
Ø விடுமுறைல் தாங்கள் வருவதோடு மட்டும் இல்லாமல், மனைவி மற்றும் சிறு குழந்தைகளை அலைத்து வருவதென்பது சிறப்பிலும் சிறப்பான விடயம். மலழைகளுக்கு சிறுவயதிலிருந்தே தரமான உணவு முறைகளை கையாள தரும் நேர்தியான பயிற்சியே இது.
Ø காலையில் சிற்றுண்டி மற்றும் கம்மாங்கூழ் ஏற்பாடு பிரமாதம்.
Ø சேற்று விளையாட்டு அபாரம், எங்களையும் ஒருதடவை கேட்டிருக்கலாம் அல்லது அனைவரும் வரும் வரை காதிருந்திருக்கலாம்.
Ø ஒரு சிலரை தவிர மற்றவர்கள் எடுத்த புகைப்படங்களில் ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றனர். மற்றவர்கள் ஒரு சிறு இடதில் கூட இடம்பெறவில்லை என்பது மனதிர்க்கு சற்று உறுதலாகவே இருக்கிறது.
Ø மற்றபடி அனைத்தூம் சிறப்பாகவே இருந்தது. நிகழ்ச்சியும் இனிதே நிறைவு பெற்றது.
என் கருத்தில் ஏதேனும் பிழையிருப்பின் தெரியபடுத்தவும், தெருத்திக்கொ ள்ள முயற்சிக்கிறேன்.
என் நன்றி
v இந்த நிகழ்கியை ஏற்பாடு செய்து எங்களுக்கு சிறப்பான வாய்ப்பளித CTC- ஐந்திணை கு என் முதற்கண் நன்றியை சமர்பிக்கிறேன்.
v என்னை OrganicVellai வரை காரில் அலைத்து வந்த சதீஷ் சாருக்கு நன்றிகள்.
v நடவின் பொது தேனீர், வடை தந்த நண்பருக்கும் ஒரு நன்றி.
v என்னையும் அழகாக புகைப்படம் எடுத்த ப்ரியா, சஞ்சய் சாருக்கும் என் நன்றியை தெரிவிக்க கடமைபட்டிருக்கிறேன்.
v திரிகடுகம் தேனீர் தந்த GTS International Trust – கும் என் நன்றி.
v இறுதியில் என்னை CIT நகர் வரை தன் காரில் A/C போட்டு என்னை அலத்து சென்ற திரு சஞ்சய் மற்றும் அவரது மனைவிக்கும் மிக்க நன்றிகள்.
v புதியதாக கிடைத்த நட்பிர்க்கும் , முன்பிருந்தே இருக்கும் நட்பிர்க்கும் என் நன்றிகள்.
நிறைய புது நண்பர்கள் வந்திருந்ததால் அனைவரின் பெயர்களையும் நியாபகம் வைத்திருக்க முடியவில்லை. அதர்க்காக மண்ணிக்கவும். மறுபடி சந்திக்கும்போது நியாபகபடுதிக்கொள்கிறேன்.
எழுதுபிழை இருப்பின் மன்னிக்கவும்....
0 comments:
Post a Comment